கமல் காலில் விழுந்த ஜோடி....இனி 1 மணி நேரம் காத்திருக்கும் விருந்து!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டார்.
அவரை அறிமுகம் செய்து வைத்த கமலிடம் காதல் மனைவி கன்னிகாவுடன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
இந்த நிகழ்ச்சி பற்றி அறிவிக்கும் போது, “தொலைத்த இடத்தில் தானே தேடமுடியும்? தோற்ற இடத்தில் தனே ஜெயிக்க முடியும்?” என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஏற்ப ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் போட்டியாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் கமல்ஹாசனால் வரவேற்கப்பட்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஏன் காட்டுகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொன்ன நடிகர் கமல்ஹாசன், ஒருவேளை 24 மணி நேரமும் பார்க்க முடியாதவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுப்பாக காண வேறு வழி உள்ளது என்று அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த நிகழ்ச்சியின் 24 மணி நேர சம்பவங்களை தொகுத்த சிறப்பு 1 மணி நேர சுருக்கம் இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. பார்த்து ரசியுங்கள்.
