பிக்பாஸ் அல்டிமேட்: இரண்டாவது போட்டியாளராக நுழையும் பெண்! யார்னு தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சி வரும் 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமாக ஹாட்ஸ்டார் மற்றும் பிரபல ரிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
24 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை ஹாட்ஸ்டாரில் மக்கள் கண்டுகழிக்கலாம். இதில் போட்டியாளர்களாக இதுவரை பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பிரபலங்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.
இதில் யார் யார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முதல் போட்டியாளரான சினேகன் மற்றும் இரண்டாவது போட்டியாளராக ஜுலி உள்ளே செல்லவுள்ளார் என்பதை ஹாட்ஸடாரில் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
அதிலும் பிக்பாஸ் தனது கம்பீர குரலின் மூலம் ஜுலி மற்றும் சினேகன் இருவரையும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு அழைக்கும் அசத்தலான காட்சியை காணலாம்.