Bigg Boss 10: குழந்தையாக மாறிய டிடிஎஃப் வாசனின் மனைவி... பிக்பாஸில் அரங்கேறிய முத்தமழை
Bigg Boss TTF Vasan Family Entry: பிக்பாஸ் வீட்டிற்கு இன்று தன்யா மற்றும் டிடிஎஃப் வாசன் குடும்பத்தினர் உள்ளே வந்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களாக பலரும் உள்ளே வந்தனர்.
சமீப வாரங்களாக இரண்டு போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வாரத்தில் பிக்பாஸ் டாஸ்க் மற்றும் நாமினேஷன் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வந்துள்ளனர்.

முதலாவதாக வினோத் மற்றும் லக்ஷ்மி பிரியா வீட்டிலிருந்து வந்திருந்தனர். இரண்டாவது நாளான நேற்று ப்ரித்வி மற்றும் அன்சர் வீட்டிலிருந்து வந்தனர்.
இதில் அன்சரின் குட்டி பாப்பா ஆல்யா ஒரே நாளில் பயங்கர பிரபலமானார். இந்நிலையில் இன்றைய தினத்தில் தன்யா மற்றும் டிடிஎஃப்-யின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
டிடிஎஃப் வாசனின் குடும்பத்தினை போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர் பயங்கரமாக எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள டிடிஎஃப் வாசனின் மனைவி மற்றும் அம்மா இருவரும் உள்ளே வந்துள்ளனர். இதில் அம்மாவிற்கும், மனைவிக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
டிடிஎஃப்-யின் மனைவி குழந்தையாக மாறி அழுதுள்ளார். கடிதம் எரிக்கப்பட்டதும் குறித்து அவர் பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |