Bigg Boss: பிக்பாஸ் நீதிமன்றத்திற்கு வந்த முக்கோண காதல்... வினோத் காதல் வலையில் வியானா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், அரோரா, கம்ருதின், பார்வதி இவர்களின் முக்கோண காதல் விசாரணைக்கு வந்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக அமித் பார்கவ் இருந்துவரும் நிலையில், பிக்பாஸ் நீதிமன்ற டாஸ்க்கினைக் கொடுத்துள்ளார்.

தற்போது நீதிமன்ற டாஸ்கில் முக்கோண காதல் விவகாரம் எழுந்துள்ளது. பாரு, கம்ருதின், அரோராவின் காதல் விவகாரம் விவாதமாக மாறியுள்ள நிலையில், வினோத், வியானா இருவரும் காதலிப்பதாக காட்டப்படுகின்றது.
இவர்களின் காதல் உண்மை தானா? என்ற கேள்வி எழுகின்றது. அந்த அளவிற்கு இருவரும் நடிப்பில் அசத்துகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |