இலங்கை பெண்ணுடன் கிசுகிசுவென ஆங்கிலத்தில் பேசிய பெண் போட்டியாளர்கள்.... கடுப்பான பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு
பிக்பாஸ் வீட்டில் சதா ஆங்கிலேத்திலேயே பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு தமிழில் பேசுமாறு கூறி குட்டு வைத்தார் பிக்பாஸ். இதற்காக பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.
இந்த வாரம் நெருப்பு காயின் ஆளுமைக்கான வாரம் என்பதால் நெருப்பை மைய்யப்படுத்தியே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.
மெழுகு வர்த்திகளை பற்ற வைக்கும் டாஸ்க், மெழுவர்த்திகளுக்கு நடுவில் பந்துகளை ஊதும் டாஸ்க், மெழுவர்த்தியை ஊதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஹவுஸ்மேட்ஸ் பிஸியாக இருக்க, கிடைத்த கேப்பில் எல்லாம் தாமரை செல்வின் காயினை திருடியதால் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை குறித்து விவாதித்தனர் பாவனியும் ஸ்ருதியும்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் பாவனிக்கும் ஸ்ருதிக்கும் ஆதரவாக இருந்த மதுமிதாவும் அவர்களுடன் சேர்ந்து அந்த சம்பவம் குறித்து பேசினார்.
லிவிங் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து பேசிய அவர்கள், கிசுகிசுவென ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தனர்.
இதனால் கடுப்பான பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களுக்காக தமிழில் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. இதில் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என குட்டு வைத்தார்.
பிக்பாஸ் வீட்டில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது ஆங்கிலத்தில் பேச ஹவுஸ்மேட்ஸ்களை அனுமதிக்கக்கூடாது என பிக்பாஸ் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். பிக்பாஸ் ரூல்ஸ்களிலும் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
ஆனால் சில போட்டியாளர்கள் அதை கண்டுகொள்வதே இல்லை. அதுவும் முக்கியமான விஷயங்கள் மற்றவர்களை பற்றி கிசுகிசு பேசும் போது ஆங்கிலத்தில் மெதுவாக பேசி எஸ்கேப்பாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.