இறந்ததுட்டாருன்னு தெரியாம அப்பாவ எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குட்டி ஸ்டோரியை கூறி கண்ணீர்விட்டார் அக்ஷரா ரெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க் இந்த வாரமும் தொடருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அக்ஷரா ரெட்டி தனது கதையை பகிர்ந்து கொண்டார்.
தனது வாழ்க்கையில் சந்தித்த ஹீரோக்கள் என்று கூறி பேச தொடங்கிய அக்ஷரா ரெட்டி, தனது அப்பா குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, என்னுடைய அப்பா ஐஐடி கோல்டு மெடலிஸ்ட். எனக்கு 8 வயசு இருக்கும் போது என் அப்பா இறந்துட்டார். என் அப்பாவும் என் அண்ணாவும் காரில் ஃபேக்டரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மயங்கி விட்டார். அப்பா விளையாடுகிறார் என்று நினைத்துவிட்டார் அண்ணன். எழுப்பியும் அப்பா எழுந்திரிக்காததால் அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள் பல்ஸ் இல்லை என்று கூறிவிட்டனர். வீட்டிற்கு கொண்டு வந்து படுக்க வைத்திருந்தார்கள்.
எனக்கு அப்பா இறந்து விட்டார் என்று தெரியவில்லை. அவரை எழுப்பிக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் எழுந்திரிக்க வில்லை. அவர் வர மாட்டார் என்று எனக்கு தெரியாது. அப்பாவோட ஃபேவரைட் நான்.
ரொம்ப வருஷம் வேண்டி பிறந்த பெண் நான். 2, 3 வருஷம் கழித்துதான் வாழ்க்கைன்னா இதான் அப்படின்னு புரிஞ்சுது. அப்பா இனிமே வரமாட்டாருன்னு புரிஞ்சுது. அப்பாதான் என்னோட முதல் ஹீரோ என்று உருக்கமாக கூறியிருந்தார்.