கண் முன்பு அக்காவின் உயிர் பிரிந்தது இப்படி தான்! பிக் பாஸில் துடி துடித்து கதறிய சஞ்சீவ்... இவ்வளவு சோகமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க் மீண்டும் நடந்தது.
வைல்டு கார்ட் போட்டியாளர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொண்டனர்.
அதில் முதலில் சஞ்சீவ் தனது வாழ்க்கை பயணம், விஜயின் நட்பு, அக்காவின் பிரிவு என பல விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அவர் கூறியதாவது,

எனது அக்காவும் சிந்து ஒரு நடிகை. அவர் மூலம் எனக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் முதல் திரைப்பயணம். நடிக்க சென்று ஓரிரு வருடத்தில் சுனாமி வந்து விட்டது. பிறகு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் சின்னத்திரை யூனியனில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பேரணியாக சென்றோம். எ
னது அக்கா திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் பெண் குழந்தை இருந்தது. அக்கா சிந்துவுக்கு வீசிங் பிரச்சினை இருக்கின்றது.
நாங்கள் மதிய உணவு சாப்பிடும் போது வீசிங் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காலையில் பார்த்த அக்கா அங்கு இல்லை... அவரின் உயிர் பிரிந்து விட்டது என்று கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகு மொத்த குடும்ப பாரமும் என் மீது வந்து இறங்கியது.
அக்காவின் குழந்தையை என் குழந்தை போல வளர்த்தேன். அவளுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டேன்.
என் வாழ்க்கையை மாற்றியதில் என் காதல் மனைவிக்கும் ஒரு பங்கு இருக்கின்றது என்று கூறி நெகிழ்ந்தார்.