Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கோண காதல் விவகாரம் தற்போது பற்றி எரிந்துவரும் நிலையில், பாரு கம்ருதின் இருவரையும் பிக்பாஸ் நேரடியாக கோபப்பட்டு பேசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக ரம்யா இருந்துவரும் நிலையில், பார்வதி, கம்ருதின், அரோரா இடையே உள்ள முக்கோண காதல் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை கம்பீரமாக விளையாடிய திவ்யா தற்போது தன்னை வெளியே அனுப்புமாறு கூறி அழுதுள்ளார். எலிமினேஷன் மூலம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய ஆதிரை கடும் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் பிக்பாஸ் சண்டை எகிறியுள்ளது. அரோராவிடம் கம்ருதின் தனது கோபத்தினை வெளிக்காட்டி அவரை வெறுத்து வருகின்றார்.
மேலும் வீட்டுக்குள் மைக்கை மறைத்து வைத்துக்கொண்டு பார்வதி மற்றும் கம்ருதின் பேசிக் கொண்டது குறித்து பிக்பாஸ் சரியான கோபத்தில் பேசியுள்ளார்.
உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது... மைக்கை மறைத்து பேசாதீங்கனு... வீட்டை சுற்றி கேமரா இருக்குதுல நீங்க மறைத்தால் தெரியாதா?
நான் தான் பசி, தூக்கம் என அனைத்தையும் விட்டுட்டு இங்கேயே உட்கார்ந்து உங்களை பார்த்துட்டு இருக்கேனே... உங்களை சீட்லாக் செய்யும் போது வலிக்குதுல... அப்போ வெளியே என்ன உங்க பாரு, உங்க கம்ருதின் சொல்றீங்க... இப்படி செய்றாங்கனு சொல்லும் போது எனக்கு வலிக்காது... என்று நேரடியாக பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |