Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷிகா... தாறுமாறாக சண்டையிட்ட ரவீந்தர்! திகைப்பில் விஷால்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷிகா உள்ளே வந்துள்ள நிலையில், அவருக்கும், ரவீந்தருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 5 தினங்களில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் பழைய போட்டியாளர்கள் கடைசியாக 8 பேர் வீட்டிற்குள் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அருணும், நேற்றைய தினம் தீபக்கும் வெளியேறியுள்ளனர். தீபக்கின் வெளியேற்றம் நியாயம் இல்லை என்று அனைவரும் கொந்தளித்து வருகின்றனர்.
தற்போது வெளியே சென்ற போட்டியாளர்களில் தர்ஷிகா உள்ளே வந்துள்ளார். தர்ஷிகாவும், விஷாலும் காதலிப்பது போன்று காட்டப்பட்ட நிலையில், இருவரும் அவ்வாறே பழகி வந்தனர்.
இது தர்ஷிகா வெளியேற்றத்திற்கு முக்கியமாக காரணமாகவே அமைந்தது. தற்போது உள்ளே வந்த தர்ஷிகாவிடம் விஷால் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ரவீந்தர்.
இதனால் இருவருக்கும் இடையே சரியான வாக்குவாதம் எழுந்துள்ளது. ரவீந்தரும் தர்ஷிகாவிற்கு சமமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |