ஆடம்பர சொகுசு வாழ்க்கை... தனலட்சுமி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த நண்பர்கள்!
பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக திகழும் தனலெட்சுமி குறித்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்பு
பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார்கள்.
இதில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர்கள் என மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதில் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறியுள்ளார்.
தொடர்ந்து பிக்பாஸ் ஆரம்பித்து முதல் நாளே மக்களின் தலைவர் ஜிபி முத்துவை ஜால்ரா என கூறி பிரபல்யமானவர் தான் தனலெட்சுமி.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல பிரபலங்களுடன் வாக்குவாதங்கள், சண்டைகளில் ஈடுபட்டு தற்போது முக்கிய போட்டியாளராக திகழ்ந்து வருகிறார்.
வசமாக சிக்கிய தனலெட்சுமி
இதனை பிக்பாஸில் இவருடைய அம்மா ஒரு தனியாள் எனவும் இவருக்கு தந்தை இல்லையெனவும் தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவருடைய தந்தையுடன் செய்த ரீல்ஸ் கிடைத்துள்ளது.
மேலும் இவர் ஒரு நடுத்தர குடும்ப பெண் என்றும் போதியளவு பண வசதியில்லையெனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்கள் அளித்த பேட்டியில், “தனலெட்சுமி பாவனைக்கு பாதணியே
பன்னிரண்டு ஆயிரம் ரூபாய் பெறும்” என தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தனலெட்சுமி பணம் கொடுத்து தான் சென்றிருப்பார் எனவும் பெற்ற அப்பாவை அப்பா இல்லையென்று நாடகம் ஆடியுள்ளார் எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
தொடர்ந்து இவர் விரைவில் பிக்பாஸை விட்டு வெளியேறுவார் என பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.