பிக்பாஸ் தாமரையை ஏமாற்றிய நடிகையின் கணவர்! கண்ணீருடன் வெளியிட்ட காணொளி
நடிகை தாமரையிடம் பிரபல சீரியல் நடிகையின் கணவர் ஏமாற்றி பணம், நகை வாங்கியுள்ள சம்பவம் குறித்து கண்ணீர் மல்க காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் தாமரை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தாமரை செல்வி.
தற்போது சில சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவதற்கு கோவில் திருவிழாவில் மேடையில் நடமாடும் கலைஞராக வலம்வந்தார்.

ஆனால் இவருக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கிக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிலையில் இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
தற்போது காரணம் என்னவென்று கூறாமல் இவரை சீரியலிலிருந்து நிறுத்தியுள்ளதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது இவர் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
ஏமாற்றிய நடிகையின் கணவர்
தாமரை சின்ன மருமகள் சீரியலில் தனக்கு மகளாக நடித்த நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதியுடன் பேசி வந்துள்ளார். ஏற்கனவே ஸ்வேதாவிற்கும், ஆதிக்கும் விவாகரத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தாமரையிடம் அவர் பேசி வந்துள்ள நிலையில், தனக்கு கஷ்டமாக இருப்பதாக பணம் கேட்டுள்ளார். தாமரையும் கஷ்டத்திற்கு பணம் கேட்கின்றார் என்று தன்னிடம் இருந்த 3 பவுன் செயினை அடமானம் வைக்க கொடுத்துள்ளார்.
இதனை ஆதி வாங்கி சென்று அடமானம் வைத்ததுடன், கொஞ்ச நாட்களில் அதனை விற்று செலவு செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பமும் உடந்தையாக இருந்துள்ளார்.
ஆதி தன்னை ஏமாற்றியுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவன் தன்னிடம் எவ்வாறு செயினை வாங்கினார் என்பதை கண்ணீர் மல்க காணொளியில் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |