பிக்பாஸ் தாமரை வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்! கண்ணீரில் குடும்பம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரையின் தந்தை உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் தாமரை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞரான தாமரை கலந்து கொண்டார். இவர் வந்த புதிதில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்று கூட தெரியாமல் இருந்தார்.
மேலும் தனது எதார்த்தமான பேச்சினாலும், செயலினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களைக் கவர்ந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது குடும்பம் தற்போது கஷ்டத்தில் தான் இருக்கின்றனர்.
ஒருமாதம் கூட பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்கமாட்டார் என்று நினைத்த தாமரை பிக்பாஸ் வீட்டில 90 நாட்கள் இருந்து மக்கள் மனதினை வென்றார்.
கழுத்தை நெறிக்கும் கடன் சுமை, அதிகமான பணத்தேவைகள் இருந்தும் பிக்பாஸில் கொடுத்த பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியே வராத இவர் 90 நாளில் மக்களால் வெளியேற்றப்பட்டார்.
தனது கணவருடன் சேர்ந்து, ரிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்டிய தாமரை பின்பு பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்திருந்தார். தற்போது பொம்மி சீரியலிலும் நடித்து வருகின்றார்.
தாமரையின் தந்தை மறைவு
தாமரையின் குடும்பம் தற்போதும் பொருளாதார நெருக்கடியில் கஷ்டப்பட்டு தான் இருக்கின்றனர். வீடு இல்லாமல் இருந்த இவர்களுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், வீடு கட்டி வருகின்றார்.
இதன் வேலை இன்னும் சில வாரங்களில் முடிந்து கிரஹப்பிரவேசம் செய்ய இருந்த நிலையில் தாமரையின் தந்தை கடந்த 31ம் தேதி உடல்நலக் குறைவினால் இறந்துள்ளார்.
தந்தை உடல்நல குறைவால் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டுள்ள தாமரைக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.