பிக் பாஸில் கண்ணீரோடு வெளியேறப்போகும் போட்டியாளர் மூவரில் இவரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 வது நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வீட்டிற்குள் யாராவது ஒருவர் வைல்டு காாடு என்றியாக உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது இந்த வீட்டில் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் போட்டியாளர்களை மக்கள் வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். 13 பேர் நோமினேஷனில் சிக்கியுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் எலிமினேட் ஆகி செல்கின்றனர்.
அந்த வகையில் இதுவரையில் அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகியோர் எலிமினேட் ஆகினர். தற்போது பல டாஸ்குகளை கடந்து ராஜா ராணி டாஸ்க் நடந்து முடிந்தது.
இந்த டாஸ்கில் பெண்கள் அணியில் இருந்து ராணியாக சாச்சனா நடித்திருந்தார். ஆண்கள் அணியில் ராணவ் நடித்திருந்தார். இந்த நிலையில் இருதரப்பிற்கும் நடந்த டாஸ்க்குகள் அடிப்படையில் யார் அதிக முறை வெற்றிபெறுகிறார்களோ அவர்களுக்கு அரியணை வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் இதில் அதிகமாக வெற்றி பெற்றது ஆண்கள் அணி தான். அதனால் அரியணையும் கைப்பற்றி கொண்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரனும், செளந்தர்யாவும் அதிக வாக்குகளை பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
அடுத்ததாக விஷால், ராணவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்று சேஃப் ஜோனில் இருக்கின்றனர்.
இதில் ஆபத்தான நிலையில் இருக்கும் போட்டியாளர்கள் வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார் ஆகிய நான்குபேர். இதில் சிவக்குமாருக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆனால் அவரை ஆண்கள் அணியின் நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றிவிட்டார்கள் ஆண்கள் அணி.
இந்த நிலையில் பெண்கள் அணியில் குறைவான ஓட்டுக்களை வாங்கி இருப்பது வர்ஷினி, ஆனந்தி, சாச்சனா இதிலும் குறைவான ஓட்டுக்களை வாங்கிய சாச்சனா தான் நாளை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |