அனல் பறக்கும் ஓட்டிங்! டபுளாக வெளியேறும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை ரசிகர்கள் கணித்து விட்டனர்.
மணிகண்டன் இந்த வார தலைவர் டாஸ்கில் வெற்றி பெற்றதால் அவர் தப்பி விட்டார்.
அதேபோல, கடந்த வாரம் நடந்த டாஸ்கில் வெற்றிபெற்ற ரச்சிதா, தனலட்சுமியை யாராலும் நாமினேட் செய்ய முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.
அனல் பறக்கும் ஓட்டிங்!
இந்த வாரம் வழக்கம் போல் கன்பெஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெற்றது.
இதில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயர்களை சொல்லி நாமினேட் செய்துள்ளனர்.
அதிலும் டபுள் எலிமினேஷன் என்பதால் இப்போதில் இருந்தே வாக்குபதிவுகள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
நாமினேட் செய்யப்பட்டவர்களில் முதல் நாள் வாக்குகளின் அடிப்படையில் ராம் மற்றும் ஏடிகே குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
வெளியேற போவது யார்?
ஆயிஷா, அசீம் பெயர் நாமினேசனில் இடம்பிடித்திருந்தாலும் அவர்களை மக்கள் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள்.
ரசிகர்களின் கணிப்பு படி நிச்சயம் ராம் வெளியேறுவார் என்பது உறுதி.
அவருடன் சேர்ந்து ஜோடியாக யார் வெளியேறுவார் என்பதே இங்கு பெரிய ட்விஸ்டாக இருக்கின்றது.