Bigg Boss Season 9: பாக்க பாக்க தான் புரியும், போக போக தான் தெரியும்... வைரலாகும் promo காணொளி!
விஜய் தொலைக்காட்சி வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள பிக்பாஸ் promo தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் பிக்பாஸ் நிகழ்சி தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.
உலகளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களை வெற்றிகமாக கடந்து தற்போது 9 ஆவது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 7 சீசன்களையும் உகல நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 ஆவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவழங்கினார்.
இந்நிலையில் ஆரம்பமாகவுள்ள 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்துவழங்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் சீசன் 9 இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி வித்தியாசமான முறையில் தற்போது வெளியிட்டுள்ள பிக்பாஸ் promo இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |