பிக்பாஸ் வீட்டில் பாருவுக்கு ஆதரவாக பேசிய அம்மா! தாறுமாறாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக்பாஸில் பார்வதியின் குடும்பத்தினர் வீட்டில் 24 மணி நேரம் தங்கும் வாய்ப்பை வென்றுள்ள நிலையில், பாருவின் அம்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் பார்வதி கம்ருதீனுடன் ஒன்றாக இருப்பதை அசாட்டாக சமாளிப்பதும், அதனை அவரது அம்மாவும் ஏற்றுக்கொள்வதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வலுத்து வருகின்றது.

பிக்பாஸ் பிக்பாஸ்
தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமான மனநிலை உருவாகியுள்ளது.
காரணம் இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்வதால் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஒரே கலகலப்பாகவும் எமோஷனலாகவும் இருப்பதால், பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்துவருகின்றார்கள்.

இந்நிலையில் மொத்த போட்டியாளர்களில் பார்வதியின் குடும்பத்தினர் வீட்டில் 24 மணி நேரம் தங்கும் வாய்ப்பை வென்றுள்ளார். இதனால் பார்வதியின் அம்மா நேற்று காலையிலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டார்.
பாருவும் கம்ருதீனும் பிக்பாஸ் வீட்டில் காட்ய காதல் லீலைகளுக்கு பாருவின் அம்மா உள்ளே வந்தால் என்ன நடக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர்.

பார்வதியை அவரின் அம்மா உள்ளே வந்ததும் வெளுத்துவாங்க போறார் என நினைத்த அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பாருவின் அம்மா பேசிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதுவரையில் பாருவை மட்டும் திட்டி தீர்த்த ரசிகர்கள் தற்போது இவரின் அம்மாவையும் எதிர்மறையாக விமர்சித்து வருகின்றார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |