ஒருவர் பேசும் போது முழுசா கேட்டுட்டு பேசுங்க.. கொந்தளிக்கும் போட்டியாளர்- கிளப்பி விட்ட டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக இன்றைய தினம் புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது 8 ஆவது சீசனில் பயணத்தை தொடர்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படவுள்ளார். கடந்த வாரங்களில் 3 பிரபலங்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்றி கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக நடிகர் ராணவ், மாடல் வர்ஷினி வெங்கட், விஜய் டிவியின் டிஎஸ்கே, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் மஞ்சரி, நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவாஜி தேவ் ஆகியோர் வந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு மொத்தமாக 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
மற்ற போட்டியாளர்களை விமர்சிக்கும் டாஸ்க்
இந்த நிலையில், இன்றைய தினம் போட்டியாளர்கள் குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் மாற்றிக் கொள்ள வேண்டிய குணம் பற்றி பேச வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் ஆளாக வந்த தீபக், “சௌந்தர்யா மற்றவர்களிடம் பேசும் பொழுது அவர்களுடன் மரியாதையாக பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..” என கூறியுள்ளார்.
அதே போன்று, “ மற்றவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும், மற்ற போட்டியாளர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்...” என அடுத்தடுத்து முத்துகுமரனை பார்த்து பவித்திரா, தர்ஷிகா இருவரும் தங்களின் கருத்தை கூறிச் செல்கிறார்கள்.
சௌந்தர்யா, “ஜெப்ரி நீ நாங்கள் கொடுக்கும் இடத்தை பயன்படுத்திக் கொள்வது போன்று தெரிகிறது..” என பேசியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |