Neeya Naana: வேலை நிமிர்த்தமாக பிரிந்த நண்பர்கள்! கண்ணீரும், கலகலப்புமான நீயா நானா
நீயா நானா நிகழ்ச்சியில் கிராமத்து நண்பன் மற்றும் நகரத்து நண்பன் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் கிராமத்து நண்பன் மற்றும் நகரத்து நண்பன் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கிராமத்தில் படித்துவிட்டு, நகரத்திற்கு மாறியுள்ள நண்பர்கள் தனது உணர்வுப்பூர்வமான கஷ்டங்களை பகிர்ந்துள்ளனர்.
ஒரே ஊரில் ஒன்றாக படித்து வந்த நபர்கள், வேலை நிமிர்த்தமாக பிரிந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்த நிலையில், உப்பு மூட்டை தூக்குதல், பச்சைக் குதிரை தாண்டுதல் என உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
கிராமத்து உள்ள தனது நண்பன் தன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பதாக நபர் ஒருவர் பேசியுள்ளார். இதில் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அவரின் வலிகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
கிராமத்தில் இருந்ததால் அப்படியே தேங்கியிருக்கும் நண்பனை பார்த்து அரங்கத்தில் நண்பர் கண்கலங்கி பாசத்தை வெளிக்காட்டிய தருணம் பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு சென்ற பின்பு தில் குறைந்துவிட்டதாக நண்பர் சொல்கின்றார். அதற்கு நகரத்து நண்பர் அங்க போய் கெத்து காட்ட முடியாதுல என்று அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |