அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemets- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா?
பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சினையில் தீபக் மற்றும் அருண் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் மஞ்சரி அழ ஆரம்பித்துள்ளார்.
பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
பதில் கூறமுடியாமல் அழுத மஞ்சரி
இந்த நிலையில், இந்த வாரம் தீபக் கேப்டனாக இருந்து வருகிறார். இது மஞ்சரி, ஆனந்தி, சாச்சனா மூவருக்கும் பிடிக்கவில்லை. இதனால் தினமும் ஒரு பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், இன்றைய தினம் அருண்- மஞ்சரி இருவருக்கும் இடையில் பிரச்சினை எழுந்துள்ளது. அந்த சமயத்தில் அருண் கையெழுத்து கூம்பிட்டு மன்னிப்பு கேட்டுகிறார்.
அதற்கு கடுப்பான மஞ்சரி “இது என்னை அதிகமாக கோபப்படுத்துகிறது.. இனி பண்ணாதீங்க..” என கூறியுள்ளார். அதற்கு தீர்ப்பு வழங்கிய தீபக் ஆண்கள் அணிக்கு சார்பாக பேசியுள்ளார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத மஞ்சரி, ஆனந்தி இருவரும் அடுத்தடுத்து அவர்கள் தரப்பிலுள்ள கருத்துக்களை கூறுகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |