விஷாலுடன் நெருக்கமாக காட்டும் தர்ஷிகா.. புலம்பி தள்ளும் பவித்திரா- சண்டை வெடிக்குமா?
விஷால்- தர்ஷிகா நெருக்கமாக இருப்பதை கண்டு பவித்திரா ஆனந்தியிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.
கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள்.
தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஏழு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
கொந்தளிக்கும் பவித்திரா
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே விஷால் மற்றும் தர்ஷிகா இருவரும் காதலிப்பதாக பிக்பாஸ் வீட்டிற்குள் புரளிகள் கிளம்பி வருகின்றன.
இதற்கிடையில் விஷால் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முன்னரே பவித்திராவுடன் தொடர்பில் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் இருவரும் அப்படியெல்லாம் இல்லை..” என அவர்களின் சமூக வலைத்தளங்களில் விளக்கம் கொடுத்திருந்தனர்.
இப்படியொரு சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் பவித்திரா, விஷால், தர்ஷிகா மூவரும் மறுபடியும் ஒரு காதல் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
அதாவது தர்ஷிகா- விஷால் நெருக்கமாக இருப்பது பவித்திராவிற்கு பிடிக்கவில்லை என ஆனந்தியிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்த விடயம் தொடர்ந்தால் கண்டிப்பாக சண்டை வரும் என்றும் கூறியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |