பிக்பாஸ் வீட்டில் மோசமாக நடந்து கொண்ட ஆண் போட்டியாளர்- விளாசிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் வீட்டில் மோசமாக நடந்து கொண்ட ஆண் போட்டியாளரை விஜய் சேதுபதி விளாசியுள்ளார்.
பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
ரயானை கிழித்து தொங்க விடும் விஜய் சேதுபதி
இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க்கில் ரயான் மற்றும் ராணவ் நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை சிறிது நேரம் சென்றதும் சண்டையாக மாறி எல்லை மீறும் சொற்களை உள்ளே பயன்படுத்தினார்கள்.
இது ஒருபுறம் இருக்கையில், ரயான்- ராணவ் சண்டையாக உருவெடுத்த பிரச்சினை இறுதியாக சௌந்தர்யா- ராணவ் சண்டையாக மாறி முடிந்தது. அதிலும் குறிப்பாக ராணவ் அப்போது பயன்படுத்திய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இதனை இன்றைய தினம் வெளியாகியாகி ப்ரோமோவில் விஜய் சேதுபதி விசாரித்துள்ளார். இவர்களுக்கான சரியான தீர்வை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |