வேலைநிறுத்தம் போராட்டத்தில் பிக்பாஸ் Housemates- முத்துகுமரன் கூறிய ஒற்றை வார்த்தை -முடிவுக்கு வருமா?
பிக்பாஸ் வீட்டில் முத்துகுமரன் கூறிய ஒற்றை வார்த்தையால் வேலையாட்களுக்கு மத்தியில் வேலைநிறுத்தம் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் 10வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரந்தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
இந்த சீசன் முடிவதற்கு 35 முதல் 40 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வாரம் எலிமினேஷனில் முதலில் ஆர்.ஜே.ஆனந்தியும், இரண்டாவதாக சாச்சனாவும் வெளியேற்றப்பட்டனர். சாச்சனா வெளியேற்றப்பட்ட போது முத்துக்குமரன் கண்ணீர் மல்கினார். இந்த வார நாமினேஷனில் 9 போட்டியாளர்களின் பெயர்கள் வந்துள்ளன.
வேலைநிறுத்தம் போராட்டத்தில் Housemates
இந்த நிலையில், நேற்றைய தினம் ஜாக்குலின் அருணை காரியவாதி என்று நாமினேஷன் செய்தார். இதனை தொடர்ந்து அருண்- தீபக் இருவருக்கும் இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டை இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது. பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாள் கொடுக்கப்பட்ட முதலாளி - வேலையாட்கள் டாஸ்க்கில் முதலாளி கூறிய ஒற்றை வார்த்தையால் வேலையாட்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கு பதில் கொடுத்த அருண்,“ வேலையாட்களை மரியாதையாக நடத்த வேண்டும்...” என கூறுகிறார், அதற்கு முத்துகுமரன், “ நீ ஒரு டுவிஸ்டர்..” என கத்துகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |