சளி, இருமலை விரட்டியடிக்கும் மருந்து குழம்பு.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
Cold Fever
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக காலங்கள் மாறும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா.. கடித்தால் குஷியான மன்சூர் அலிகான்- அதிர்ச்சியில் பொலிஸார்!
சளி, இருமல் அதிகமாக இருக்கும் பொழுது தொண்டைவலியும் சேர்ந்து கொள்ளும் இதனை தடுக்க வேண்டும் என்றால் கை மருந்து அவசியம்.
அந்த வகையில் சளி, இருமலை தடம் தெரியாமல் விரட்டியடிக்கும் மருந்து குழம்பு எப்படி செய்வது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மிளகு – 3 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- பூண்டு – 30 பல்
- சின்ன வெங்காயம் – 36
- காய்ந்தமிளகாய் – 8
- தேங்காய் துருவல் – 1/2 கப் க
- டுகு – 1/4 டீஸ்பூன்
- உளுந்து – 1/4 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- தனியாத்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- புளி – 2
- எலும்பிச்சைப்பழம்
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
மருந்து குழம்பு செய்முறை
- முதலில் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பச்சை வாசம் வரும் பொழுது பூண்டு , காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதங்க விடவும்.
- வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் அதனை ஒரு பவுலில் போட்டு சற்று நேரம் ஆற விடவும். ஆறிய பின்னர் மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக பொரித்தெடுக்கவும்.
- பொரிந்தவுடன், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும். வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கிக் கொள்ளவும்.
- இதனை தொடர்ந்து மஞ்சள்தூள், தனியாத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழம்பை நன்றாக கொதிக்க விடவும்.
- கொதித்து வரும் போது புளி தண்ணீரை குழம்பில் ஊற்றவும். கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் காரசாரமான மருந்து குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US