ரூல்ஸை மீறிய போட்டியாளர்... அசீமிற்கு போட்டியாக இறங்கிய பிரதீப்: ஆரம்பித்த முதல் சண்டை
பிக்பாஸ் வீட்டிற்குள் ரூல்ஸை மீறிய போட்டியாளர்களுக்கு தண்டைக் கொடுக்கப்பட்ட போது பிரதீப் இடையில் வாய் கொடுத்து பிரச்சினை ஆரம்பித்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் நேற்று ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும். அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள்.
இந்த சீசன் புதிய முயற்சியாக அனைவரும் குழம்பிப் போகும் வகையில் இரண்டு வீடு இருக்கிறது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் முன்னதாக அறிவித்திருந்தார்.
விசித்திரா- பிரதீப் மோதல்
இந்நிலையில் 20 பேர் ஒரு வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அந்தவகையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் வீட்டை இரண்டாக பிரித்து 6 பேரை அனுப்பியிருந்தார்.
இன்று சமையலறை கட்டுப்பாடுகளை மீறிய காரணத்தால் விசித்திரா மற்றும் யுகேந்திரனை பிக்பாஸின் இரண்டாவது வீட்டிற்கு செல்லுப் படி கூறியிருந்தார். அந்தவேளையில், பிரதீப் பிக்பாஸ் சின்ன வீட்டில் நாமினேஷன் ஆகாத இருவரை இந்த வீட்டிற்கு அனுப்ப செல்லவும் விசித்திரா பொங்கி எழுந்திருக்கிறார்.
இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அசீம் நம்மை விங்கு எங்கும் போகவில்லை பிரதீப் ரூபத்தில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |