நியாயமே இல்லாத அநியாயப் போராட்டம்... நடந்த சண்டைகளுக்கு கமல் கொடுக்கும் நியாயமான தீர்ப்பு!
கடந்த நாட்களாக வீட்டில் நடந்த பிரச்சினைகளை எல்லாம் கமல் ஒவ்வொன்றாக தீர்க்கும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
இந்தப் போட்டியில் அனன்யா இந்த வாரம் வௌியேற்றப்பட்டார், பாவா செல்லதுரை உடல் நலக்குறைவால் அவரே வெளியேறினார்.
அநியாயப் போராட்டம்
இன்றைய ப்ரோமோவில் வார வாரம் நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் கமல் விசாரணை நடத்தி அதற்கான பதில்களை கொடுப்பார்.
அந்தவகையில் கடந்த நாட்களாக பிக்பாஸ் வீட்டில் போராட்டம் என்றப் பேரில் தண்ணீர் கூட கொடுக்காமல் நியாயம் இல்லாமல் நடத்திய போராட்டம் குறித்து கமல் கூறும் விளக்கமும் தீர்ப்பும் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |