பிளான் போட்டு விளையாடும் ஜோவிகா... இரு பக்கமும் ஆடும் கூல் சுரேஷ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவும் கூல் சுரேஷும் கேமை அறிந்து விளையாடுவதாக சக போட்டியாளர் கணித்து கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
இந்தப் போட்டியில் அனன்யா இந்த வாரம் வௌியேற்றப்பட்டார், பாவா செல்லதுரை உடல் நலக்குறைவால் அவரே வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிளான் போட்டு ஆடும் ஜோவிகா
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வழமைப் போல் இல்லாமல் இரண்டு வீடுகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் தினமும் ஒவ்வொரு சண்டையும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது போட்டியாளர்களான மணி சந்திராவும், சரவண விக்ரமும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கணித்து சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் ஜோவிகா, பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எப்படி விளையாடுகிறார் என்று பேசியிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |