இந்த அசிங்கம் தேவையா? தாமரை செல்வியிடம் மூக்குடைப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ வீட்டின் கேப்டனான தாமரை செல்விக்கும் பிரியங்காவுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடப்பதாக உள்ளது.
இதில் பாத்திரம் கழுவும் பிரியங்கா, தாமரை செல்வியை அழைத்து, இந்த வீட்டில் எல்லா வேலையும் சிறப்பாக செய்தவர் யார்? நல்லப்பிள்ளை யார் என்று கேட்பார். அதற்கு வீட்டின் தலைவரான நீ யார் பெயரை சொல்வாய் என்று கேட்கிறார்.
அதற்கு பதில் சொல்லும் தாமரை செல்வி, மூன்று பேருமே நல்லாதான் பார்த்தார்கள் என்று கூறுவேன் என்கிறார்.
அதனை கேட்ட பிரியங்கா அது எனக்கு தேவையில்லை, நீயும் நானும் ஃபிரண்ட்ஸ் தானே.. நீ எனக்கு ஃபிரண்டா இருக்குறதுக்கு எனக்கு ஏதாவது லாபம் இருக்கணுமா இல்லையா என்கிறார்.
பிரியங்கா கேட்கும் எல்லா கேள்விக்கு ஆமாம் ஆமாம் சரிதான் என தலையை ஆட்டுகிறார் தாமரை செல்வி. இதனை பார்த்த பிரியங்கா, இப்போ சொல்லு யார் பேர சொல்லுவ என்று கேட்க, பட்டென யோசிக்காமல் நாடியா என்று கூறி பிரியங்காவிற்கு நோஸ் கட் செய்திருக்கின்றார்.