மேடையில் கதறி அழுத அபிஷேக்... அட்ரஸ் இல்லாமல் தொலைந்த அம்மா! தற்போதைய நிலை என்ன தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கொண்டாட்ட ப்ரோமோவில் அபிஷேக் ராஜா மிகவும் எமோஷனலாகி கதறி அழுகிறார்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் இன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
சினிமா பையன் அபிஷேக் சில வலைதள மீடியாக்களில் பணியாற்றிய அதிக பிரபலங்களை பேட்டி எடுத்து மக்களிடம் பிரபலமானவர்.
பிக் பாஸ் கிராண்டு ஃபினாலேவில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கொண்டாட்ட ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இதில் அபிஷேக் ராஜாவின் அம்மா அழகே அழகே பாடலுக்கு அழகாக நடனமாடுகிறார். என் அம்மாதான் என் கடவுள், அவங்களுக்கு காய்கறிக்கூட வாங்கத் தெரியாது, அவங்களுக்கு தெரிந்தது எல்லாமே அப்பாத்தான், அவர் போன பிறகு அட்ரஸ் இல்லாமல் தொலைந்த குழந்தைகள் போல ஆகிவிட்டோம் என்று மேடையிலேயே அம்மாவை கட்டியணைத்து கதறி அழுகிறார் அபிஷேக் ராஜா.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. அபிஷேக்கின் அம்மா அவ்வளவு அழகாக அதில் நடனமாடுகிறார்கள்.