மள மள வென கூடிய பரிசுத் தொகை! அடேங்கப்பா..... எத்தனை லட்சம் தெரியுமா? அன்சீனில் லீக்கான தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியே இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் நிலையில், ரூ. 8 லட்சம் வரை பரிசுத் தொகை உயர்த்தப்பட்டும் போட்டியாளர்கள் அதை பொருட்படுத்தாது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
7 லட்சம் ரூபாய் வரை காட்டப்பட்ட நிலையில், அன்சீனில் ரூ. 8 லட்சம் இருக்கும் பணப்பெட்டி கண்ணை பறிக்கிறது.
தாமரை ஒரு கோடி கொடுத்தாலும் வெளியேற மாட்டேன் என விளையாடி வருகிறார்.

நேற்று 3 லட்சம் வைத்த நிலையில், பணம் இன்னும் அதிகமாகட்டும் என விட்டு வைத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை அதிகரித்தும் எடுத்துக் கொண்டு செல்லாத நிலையில், நாளை 10 லட்சம் வரை அதிகரிக்கும் என போட்டியாளர்கள் காத்திருக்கிறார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கே ரூ. 50 லட்சம் தான் பரிசு யாராவது எடுத்துட்டு போங்க அதிர்ஷ்டம் உங்களுக்குதான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.