அம்பியாக மாறி அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த நிரூப்.... தற்போதைய பரிதாப நிலையால் ரசிகர்கள் ஷாக்!
அந்நியனாக அட்டகாசம் செய்து கொண்டிருந்த நிரூப் மீசையை எடுத்து அம்பியாக மாறியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிராமத்து ஆளாக மாற ராஜு பாய் திடீரென தனது மீசை ஸ்டைலை எல்லாம் மாற்றிய நிலையில், டாஸ்க்குக்காக தனது மீசையை ஷேவ் செய்தார் நிரூப்.
இந்த வாரம் நிலம் ஆற்றலை கொண்டு பெட்ரூம் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிரூப் இப்படி ஒரேயடியாக மாறி விட்டாரே என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
கடந்த சீசனில் ஜோடி ஜோடியாக ஆட வைத்த பிக் பாஸ் இந்த சீசனில் கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்களை தனித்தனியாக ஆட வைத்து சினிமா சினிமா எனும் பெயரை வைத்துள்ளார். அந்த டாஸ்க்கில் நிரூப்புக்கு மட்டும் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் வாய்ப்பினை கொடுத்துள்ளார்.
அம்பியாக நிரூப் கெட்டப் போட்டு மாற.. அவரது மீசையை ரொம்பவே இடைஞ்சலாக இருந்ததை உணர்ந்து கதாபாத்திரமாகவே மாற வேண்டும் என்பதற்காக தன்னுடைய மீசையை ஷேவ் செய்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.
நிரூப்பின் இந்த புது கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் என்னடா ஆக்வாமேனை அம்பியாக மாத்திட்டீங்க என கிண்டல் செய்து வருகின்றனர்.