பிக் பாஸில் 63 நாட்கள் இருந்தாலும் பல லட்சங்களுடன் வெளியேறிய ராணவ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில், 63 நாட்களுக்கு மேல் நிலைத்து விளையாடி வெளியேறியுள்ள வைல்டு கார்டு போட்டியாளரான ராணவ்வின் சம்பளம் பற்றிய தகவல் இணைத்தில் வைரலாகி உள்ளது.
பிக் பாஸ்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இது கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
இதில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர்தான் ராணவ். இவர் நேற்றைய தினம் பிக் பாஸ் விளையாட்டை விட்டு வெளியேறி சென்றார். இதற்கு முன்னர் ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சாச்சனா, சத்தியா, சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், சிவக்குமார், ஆகியோர் வெளியேறி சென்றுள்ளனர்.
தற்போது இதில் டாப் 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் தீபக், பவித்ரா, விஜய் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் மற்றும் ராயன் ஆகியோர் உள்ளனர்.
பிக் பாஸ் முடிவடைய இன்னும் 2 வாரமே உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, ராணவ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இவர் சில திரைப்படங்களில் நடித்து தற்போது ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர்.
இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியால் சம்பளமாக 20 முதல் 22 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. இவர் 12 முதல் 15 லட்சத்திற்குள் சம்பளமாக பெற்றுவதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |