கமல் வீட்டில் இருந்து வந்த சாப்பாடு! அடித்து கொண்டு ருசித்த பிக்பாஸ் போட்டியாளர்
நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் இருந்து இன்று உணவு அனுப்பப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் அடித்து பிடித்து ருசித்து மகிழ்ந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
கமல் வீட்டு விருந்து
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எனது வீட்டு சமயல் அறையில் இருந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு உணவு அனுப்பி வைக்கப்படும் என்று உலகநாயகன் சர்ப்ரைஸை அறிவித்தார்.
அதாவது, அடுத்தவராம் போட்டியாளர்களை சந்திப்பதற்குள் உலகநாயகன் வீட்டு சாப்பாடு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விருந்து கொடுக்கும் என்றார்.
அதேபோல, நடிகர் கமல் வீட்டு சமயல் அறையில் இருந்து இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கப்பட்டது.
அடித்து கொண்ட போட்டியாளர்கள்
போட்டியாளர்கள் சுவையான உணவு கிடைத்த மகிழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி கூறினார்கள். பிறகு சண்டை போட்டு கொண்டு உணவை ருசித்தார்கள்.
இறுதியில் பாதாம் பாயாசத்திற்காக போட்டியாளர்கள் அடித்து கொண்ட ருசிகர சம்பவங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதிவாகியுள்ளது.
In front of #Shivin people were serving them payasam after 2 cups . #Vikraman was served half cup by shiv.#vikraman? was told extra iruku he said “if extra is there give me i was served less” shiv comes in blaming ??♂️ #BiggBossTamil6 #BiggBossTamil #vikramanarmy #VaathiVikraman pic.twitter.com/jnuHl6W7iT
— siva (@winsiva1994) December 8, 2022