புரண்டு புரண்டு சிரித்த கமல்! ராபர்ட் மாஸ்டரிடம் சிறுநீர் கேட்டு அசிங்கப்பட்ட ரச்சிதா - இப்படி ஒரு அவமானமா?
பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்கில் நடந்த ருசிகர தகவலை உலகநாயகன் கமல் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஷ்யம் குறையாமல் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றது.
ராஜா ராணி டாஸ்கில் செந்தமிழில் தான் பேச வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
சிறுநீர் கேட்ட ரச்சிதா
செந்தமிழில் பேச வேண்டும் என்பதற்காக சிறிது தண்ணீர் வேண்டும் என கேட்படதற்கு பதிலாக ரச்சிதா சிறுநீர் வேண்டுமென ராபர்ட் மாஸ்டரிடம் கேட்டுவிட்டார்.
ராபர்ட் மாஸ்டர் தமிழ் பிழையை திருத்தாமல் ராணி கேட்டுட்டாங்க இதோ கொண்டு வருகிறேன் என்று சென்றது தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
ROFL ?#KamalHaasan ??#Rachitha #RobertMaster #biggbosstamil #biggbosstamil6 #BiggBoss6Tamil
— Tharani ᖇᵗк (@iam_Tharani) November 19, 2022
pic.twitter.com/I63QrbOre0
புரண்டு புரண்டு சிரித்த கமல்
அதை பார்க்கும் போது புரண்டு புரண்டு சிரித்தேன் என்றும் எழுதினால் கூட இப்படியொரு காமெடி வராது எனவும் கமல் நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ரச்சிதாவுக்குத் தான் தமிழில் பிரச்சனை ராபர்ட் மாஸ்டருக்குமா பிரச்சினை என கேட்டு மானத்தினையே வாங்கி விட்டார்.
இந்த ராயல் மியூசியம் டாஸ்க்கில் அத்தி பூத்தது போல வந்து விழுந்த ஜோக் இது ஒன்று தான் என நடிகர் கமல் சிரித்து கொண்டே இந்த பிரச்சினையை பேசி முடித்தார். இது போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லை பார்வையாளர்களுக்கும் சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது.