கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட அசீம்! அதிரடியாக வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ
கடைசி நேரத்தில் அசீம் மக்களினால் காப்பாற்றப்பட்டு நிவாஷினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இரண்டு வாரங்களாக அசீம் முதல் நபராக சேவ் செய்யப்பட்டார்.
காப்பாற்றப்பட்ட அசீம்
சனிக்கிழமை நிகழ்ச்சியில் அசீம் சேவ் ஆகாத நிலையில் அவர் தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என போட்டியாளர்கள் நினைத்தனர்.
அதற்கு ஏற்றது போல இந்த வாரம் பிக் பாஸில் இருந்து யார் வெளியேற போவது என்று நடிகர் கமலும் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மைனாவை தவிர அனைத்து போட்டியாளர்களும் அசீம் தான் வெளியேற போகிறார் என்பதை உறுதியாக கூறினார்கள்.
#Azeem First save pannirundhalum ivlo interesting ah irundhurkadhu?All became fuse pona bulb now?? #BiggBossTamil6 pic.twitter.com/KYlXIeoffi
— Raghav (@Raghav9099) November 20, 2022
அதிரடியாக வெளியேறிய நிவாஷினி
போட்டியாளர்கள் அவரை தெரிவு செய்திருந்தாலும் மக்கள் காப்பாற்றி விட்டனர்.
கடைசி நேரத்தில் குறைந்த வாக்குகளை பெற்ற நிவாஷினி வெளியேற்றப்படுவதாக நடிகர் கமல் அறிவித்தார்.
இந்த நிலையில் அந்த காட்சியை அசீம் ரசிகர்கள் வைரலாக்கி அவருக்கு ஆதரவுகளை குவித்து வருகின்றனர்.