அப்பாவ மன்னிச்சிடுனு கையெடுத்து கும்பிட்ட இலங்கை ADK ! 2 வயதில் பிரிந்த மகன் - இப்படி ஒரு சோகமா?
ஒரு தந்தையா என் மகனிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று இலங்கை போட்டியாளர் ஏடிகேபிக் பாஸிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நீங்கள் யாரை மிகவும் மிஸ் பண்ணுகின்றீர்கள் என்று ஏ.டி.கேவிடம் பிக் பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ஏ.டிகே கூறியதாவது,
நான் என் மகனை பிரிந்து தான் இருக்கிறேன். யாரும் பிழையில்லை.
திருமண வாழ்வில் எனக்கு விருப்பம் இல்லை
சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் காரணம். என் மகன் என்னிடம் இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்.
2 வயதில் என் மகனை பிரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. என்னுடைய திருமண வாழ்வில் எனக்கு விருப்பம் இல்லை.
அதனால் தான் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மற்றப்படி உங்களை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்தது இல்லை. இப்போது மகனுக்கு 8 வயது ஆகின்றது.
என்னுடைய மகன் என்னை மட்டுமே அப்பா என்று கூப்பிட வேண்டும் என்று அதட்டி பேசினேன்.
அது உன் மனதை உடைத்து இருக்கலாம். அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
அதை தவிர இன்று வரை உன் மீது நான் கோவப்பட்டது கூட இல்லை என்று மிகவும் உருக்கமாக இலங்கை ஏடிகே பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.