அவமானத்தால் கூனி குறுகிய இலங்கை பெண் ஜனனி ! குயின்சி காலில் ஏன் விழுந்தார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸில் குயின்சியின் டவலை ஜனனி எடுத்தது பெரிய விவாதமாக போன நிலையில் ஜனனி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்றை நிகழ்ச்சியில் ஜனனி திடீரென்று குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை பதற வைத்திருந்தது.
உண்மையில் என்ன நடந்தது?
நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் உண்மையில் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரிந்தது.
இலங்கையில் இருந்து சென்ற பிக் பாஸ் போட்டியாளரான ஜனனி அவசரத்தில் குயின்சியின் டவலை எடுத்து பாவித்து விட்டார். அதை ஜனனி கையில் பார்த்த குயின்சி அது என்னுடையது.
என்னுடைய பொருளை யார் என்னிடம் கேட்காமல் எடுத்தாலும் எனக்கு பிடிக்காது.
என்னுடைய அப்பா, தம்பியாக இருந்தாலும் எனக்கு பிடிக்காது என்று கூறுகின்றார்.
மனமுடைந்து போன ஜனனி
இதனால் மனமுடைந்து போன ஜனனி மன்னிப்பு கேட்கிறார். ஆடை இல்லதமல் தான் எடுக்க வில்லை. அந்த சூழ்நிலையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அது தவறு தான் என்று கூறினார்.
இந்த விவாதம் நீண்டு கொண்டே போக தனலக்ஷ்மி ஜனனிக்கு ஆதரவாக குயின்சியிடம் சற்று குரலை உயர்த்தி பேசினார்.
அவமானத்தால் கூனி குறுகிய இலங்கை பெண்
அதனால் குயின்சி மனமுடைந்து நான் ஜனனி எடுத்ததற்காக கூற வில்லை. என்னுடைய டவல் என்பதால் உடனே அதிர்ச்சியாகி அனைவர் முன்பும் கூறிவிட்டேன் என்று புலம்பி கொண்டிருந்தார்.
ஜனனியும் தான் செய்தது தவறு குயின்சியுடையது என்று தெரிந்திருந்தால் அந்த சூழலில் எடுத்திருக்க மாட்டேன் என்று குறிப்பிடுகின்றார்.
இது தான் நிகழ்ச்சியில் நடந்தது. ப்ரோமோவை பார்த்து பெரிய சண்டையாக இருக்கும் என்று நிகழ்ச்சியை பார்த்தால் சாதாரண டவல் பிரச்சினை தான் என்பது புரிய வந்தது.