டபுள் எவிக்சன்! கமல் அதிரடி... யார் யார் வெளியேற வாய்ப்பு இருக்கு?
அடுத்த வாரம் டபுள் எவிக்சன் என்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 57வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ஞாயிற்று கிழமையான நேற்று உலகநாயகன் போட்டியாளர்களை சந்தித்தார்.
ராசிகர்களின் கணிப்பு போல நேற்று குயின்சி வெளியேற்றப்பட்டார்.
டபுள் எவிக்சன்!
அந்த சமயத்தில் பிக் பாஸ் போட்டிளார்களுக்கு உலகநாயகன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அடுத்த வாரம் டபுள் எவிக்சன் என்று குண்டை தூக்கி போட்டார். ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் மூழ்கி விட்டனர்.
இந்த வாரம் ஜனனியும், மைனாவும் தப்பி விட்டார்கள்.
யார் வெளியேற வாய்ப்பு
ஒரு வேளை நாமினேஷனில் சிக்கினால் மைனா வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல இந்த வாரம் நாமினேஷனில் சிக்காமல் இருந்த மணிகண்டன், ஏடிகே எல்லாம் அடுத்த வாரம் நாமினேஷனுக்கு கொண்டு வந்தால் மணிகண்டன் வெளியேற வாய்ப்பு உள்ளது.
மைனாவும், மணிகண்டனும் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக இன்றே ரசிகர்கள் கணித்து விட்டனர்.