Bigg Boss: பிக் பாஸ் வைத்த புதிய திட்டத்தில் உள்நுழையும் நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ப்ரீஸ் டாஸ்கில் பிக் பாஸ் ஒரு புதிய திட்டத்தை வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தருகின்றனர். முதலாவதாக வருகை தந்தவர்கள் தீபக்கின் மனைவி சிவரஞ்சனி மற்றும் மகன்.
இவர்களை தொடர்ந்து மஞ்சரி குடும்பத்தினர் வந்தனர், அடுத்ததாக ரயான் மற்றும் விஷால் குடும்பத்தினர் வந்திருந்தனர். இரண்டாம் நாளில் பவித்ரா, ராணவ், செளந்தர்யா மற்றும் அன்ஷிதாவின் குடும்பத்தார் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று முதலில் ஜெஃப்ரியின் அம்மா மற்றும் அப்பா காலையில் வருகை தந்திருந்தனர். அடுத்ததாக அருண் பிரசாத்தின் பெற்றோர் வந்தனர்.
மூன்றாவதாக முத்துக்குமரனின் பெற்றோர்கள் வந்திருந்தனர். இறுதியாக ஜாக்குலினின் தாய் வருகை தந்திருந்தார். இப்படி ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் புதிய திட்டம் வைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ட்விஸ்ட் என்னவென்றால் டாஸ்க்கில் நாளை உள்ளே உள்ள போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வர போகின்றனராம்.அந்த வகையில் அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனாவும் நாளை பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |