பாருவும் கமரூதினும் பிக் பாஸ் நீச்சல் குளத்தில் விதியை மீறிய காட்சி - வைரல் காணொளி
தற்போது பிக் பாஸ் வீட்டில் பாருவும் கமரூதினும் விதியை மீறி செயற்பட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9, இந்த வாரத்துடன் 11 வாரங்களை நிறைவு செய்கிறது. 12 வது வாரமான அடுத்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்ட் வாரம் நடைபெறவுள்ளதால் போட்டியாளர்களை போல ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதில் காதல் என்ற பெயரில் பல ஜோடிகள் எலாவி வந்தன அதில் பாருவும் கமரூதினும் ஒரு ஜோடி.
இப்போது இந்த பிக் பாஸ் வீட்டில் இவர்கள் தான் கன்டன்ட் ஆக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விஜய் சேதுபதியிடம் பாரு தப்பு செய்து திட்டு வாங்கி கொள்வார்.

கடந்த வாரத்தில் பார்வதியும் கமருதீனும் மைக்கை கழட்டி வைத்தும், மைக்கை மறைத்தும் பேசினார்கள். இதற்காக விஜய் சேதுபதியிடம் கடுமையான எச்சரிக்கைகளையும் திட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் பயன் என்ன தற்போதும் ஒரு விதியை மீறி செயற்பட்டுள்ளனர். இவர்களை திருத்தவே முடியாது என மக்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
விதியை மீறிய காட்சி
அதாவது பாருவும் கமரூதினும் இந்த வாரம் பெரிய தவறு ஒன்றை செய்துள்ளனர். அதாவது இருவரும் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இருவரும் மைக்கை கழட்டி வைத்து குளித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், இருவரும் மைக் இல்லாமல் குளத்திற்குள் பேசிக்கொண்டும் இருந்துள்ளனர்.
இதைப் பார்த்த பிக்பாஸ் இருவரையும் மைக்கை மாட்டச் சொல்லி அறிவுருத்தினார்.இந்த காட்சி தற்போது மக்கள் மத்தியில் பரவலாக பார்க்கபட்டு வருகின்றது.
#VJParvathy & #Kamrudhin should be sent out of weekend episode for Mic issue!
— BB Mama (@SriniMama1) December 20, 2025
Both UNDESERVED to stay in this house! #BiggBossTamil9 #BiggBoss9Tamil
pic.twitter.com/LOnpLYs0aH
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |