பிக்பாஸ் சுபிக்ஷாவுக்கு அவரின் தம்பி கொடுத்த வரவேற்பை பாருங்க...குவியும் பாராட்டுக்கள்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சுபிக்ஷாவை அவரது தம்பி Leander அன்பு முத்தங்களுடன் பூக்கொத்து கொடுத்து வரவேற்ற அழகிய காணொளி இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த சமயத்தில், இரண்டு போட்டியாளர்கள் ரெட் கார்ட் வாங்கி வெளியேறி இருந்தார்கள்.
பிக்பாஸ் சீசன் 9 போட்டியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி பார்வதியும் கம்ருதினும் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவதாக அந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார்.

அதனை தொடர்ந்து பணப்பெட்டியுடன் கானா வினோத் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுபிக்ஷாவை அவரது தம்பி Leander அன்பு முத்தங்களுடன் வரவேற்ற நெகிழ்ச்சியாக தருணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், இவர்களின் அக்கா, தம்பி பாச பிணைப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |