Bigg Boss Tamil 9:என்னடா நடக்குது இங்க? பிக் பாஸில் கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி
பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு வாரத்தைக் கடந்திருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சீசன்களைப் போல அல்லாமல் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய நபர்கள் தான் இந்த போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வாட்டர் மெலன் திவாகர், ஆதிரை, கனி, கலை, வி.ஜே.பார்வதி, விக்னேஷ், கம்ருதின் என 20 பேர் தெரிவு செய்யபட்டுள்ளனர்.
இதற்கு மக்களிடையில் பல விமர்சனங்களும் வந்துகொண்டு இருக்கின்றது. முதல் வாரத்தில் பல சண்டைகள் நடந்து அதில் பிரவின் காந்தி வெளியேற்றபட்டார். இப்போது 10 நாள் நடந்துகொண்டு இருக்கின்றது.
பார்வதியை வெட்கப்பட வைத்த கம்ருதின்
அதாவது 10 நாள் காலை 10.50 க்கு பார்வதி அரோரா துஷார் மற்றும் கம்ருதின் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதி நாம எல்லோரும் ஒரு கேம் விளையாடலாம்.
என கம்ருதினிடம் கூறிவிட்டு நீ ஒவ்வொரு ஆண்களின் பெயர் சொல்லு அதற்கு நானும் அரோராவும் மார்க் போடுகிறோம் என கூறினார். முதலில் பிரவீன் ராஜ் க்கு இருவரும் 6 கொடுத்தனர்.
பின்னர் துஷாருக்கு 7 கொடுத்தனர் அதன் பின்னர் சபரிக்கும் 7 கொடுத்தனர். அதில் அரோரா கம்ருதின் என கூறும் போது பார்வதி கம்ருதினை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்.
அதாவது அவன் பாக்கவும் நல்லா இருக்கான் அதுவும் அவன் ஒவ்வொரு நேரமும் உடுத்திட்டு வரும் போது அப்படி அழகாக இருப்பான் நான் அவனுக்கு 7 கொடுக்கிறேன் என கூறினார்.
அதன் பின்னர் பார்வதியை பற்றி அரோரா கேட்க அவங்க கம்ருதின் அவங்க பார்க்க என்னுடைய எக்ஸ் மாதிரி இருக்காங்க டஸ்கி பொண்ணுங்க னா எனக்கு பிடிக்கும். பார்க்க கியூட்டா இருக்காங்க என கூறி பார்வதியை வெட்கப்பட வைத்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |