Bigg Boss: ருத்ரதாண்டவம் ஆடி உடைந்து போன அரோரா... பிக்பாஸிடம் செய்த தர்ணா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதின் மற்றும் அரோரா இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் உடைந்து போய் பிக்பாஸிடம் பேசுவதற்காக செய்த காரியம் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் ஆதிரையும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ளார்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக அமித் இருந்துவரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி வைரலாகி வருகின்றது. கம்ருதினிடம் அரோரா நன்றாக பேசிக் கொண்டிருந்த நிலையில், ஆதிரை வந்த பின்பு இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது.

இதனால் உடைந்து போன அரோரா பயங்கரமாக கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் பிக்பாஸிடம் பேசுவதற்காக கேட்டுள்ளார். அப்பொழுது பிக்பாஸ் பதில் அளிக்காததால் பிக்பாஸ் கன்பெக்ஷன் அறைக்குள்ளே தர்ணா இருப்பது போன்று காணப்பட்டுள்ளார்.
அந்த அறையில் அழுதுகொண்டிருந்த அரோராவிடம் திடீரென வந்து பிக்பாஸ் பேசியுள்ளார். அதாவது காலை வணக்கம் சொல்லிவிட்டு, ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கீங்களா? நான் கூப்பிட்டதும் வந்துருக்கலாம்ல என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னால் இருக்கமுடியவில்லை என்று அரோரா கூறியதற்கு அடிவாங்க போறீங்க என்று கூறியுள்ளார். எனக்கும் வயிறு இருக்குதுல... சாப்பிடனும்ல... தூக்கம் வரும்லா... அப்பறம் இப்படி சொல்லாமல் வந்துவிட்டு கெட்ட பெயர் எனக்கா? என்று கேட்டுள்ளார்.
மேலும் அரோராவிற்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்துவிட்டு அவரை அனுப்பியுள்ளார். இதுவரை அரோராவை இவ்வாறு பார்த்தது இல்லாததால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |