பூர்ணிமா இடத்தை பிடித்த பிக்பாஸ் பிரபலம்- விஷ்ணுவின் பதில்.. காதல் கோட்டையாக மாறிய வீடு
பூர்ணிமாவின் இடத்தை சௌந்தர்யா பிடித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 11 போட்டியாளர்கள் உள்ளனர்.
இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டிகள் மற்றும் சண்டைகள் என அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் நடந்த டாஸ்க்கில் முத்துகுமரன் விட்டுக் கொடுத்து விளையாடிய காரணத்தினால் நாமினேஷன் ப்ரி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பூர்ணிமா இடத்தை பிடித்த செளந்தர்யா
இந்த நிலையில், போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்கள் நேற்றைய தினம் வருகை தந்துள்ளனர். அப்போது பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் சௌந்தர்யாவை காண முன்னாள் பிக்பாஸ் பிரபலம் விஷ்ணு வந்திருந்தார்.
அந்த சமயத்தை பயன்படுத்திய சௌந்தர்யா மாவில் தன்னுடைய காதலை எழுதி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கொடுத்திருந்தார்.
சௌந்தர்யாவின் காதலை உடனே விஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கடந்த சீசனில் விஷ்ணு விளையாடிய போது அவர் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறி வந்தார். அவர்கள் இருவரும் ஆடிய நடனத்தையும் நாம் பார்த்திருப்போம்.
இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சீசனில் சௌந்தர்யாவின் காதலை ஏற்றுக் கொள்வது இணையவாசிகளை அதிர்ச்சிடைய வைத்துள்ளது.
இப்படியாக நேற்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |