பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சீரியல் நடிகை- கதறியழுத பவித்திரா-டைட்டில் வின்னர் ஆவாரா?
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சீரியல் நடிகை பவித்திராவிற்கு கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 11 போட்டியாளர்கள் உள்ளனர்.
இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டிகள் மற்றும் சண்டைகள் என அதிகமாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நடந்த டாஸ்க்கில் முத்துகுமரன் விட்டுக் கொடுத்து விளையாடிய காரணத்தினால் நாமினேஷன் ப்ரி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது ப்ரீஷ் டாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது.
கதறியழுத பவித்திரா
இந்த நிலையில், போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்கள் இன்றைய தினம் வருகை தந்துள்ளனர்.
அப்போது பவித்திராவை காண வந்த சீரியல் நடிகை அவருக்கு ஆறுதலாக பேசியுள்ளார்.
அதாவது, “ இந்த வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை விட நீ தான் மிகவும் நல்லவள், நீ உனக்கு தோணுறத மட்டும் செய். மற்றவர்களுடன் சண்டை போடணும் அவசியம் இல்லை..” என பேசியுள்ளார்.
அத்துடன் பவித்திராவும் இதுவரை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் அனுபவித்த விடயங்களை நினைத்து கட்டிபிடித்து அழுதுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |