பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்... ஒரே குடும்பத்தில் இரண்டு போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக 5 பேர் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டியாளர்களில் முதல் வாரத்தில் குறைவான வாக்குகளைப் பெற்று அனன்யா வெளியேறியிருந்தார். அதனைத் தொடர்ந்து உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட அவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் இந்த வாரம் விஜய் வர்மா வெளியேறியிருந்தார்.
வைல்ட் கார்ட் போட்டியாளர்
புது டாஸ்குகள் மூலம் பிக்பாஸ் வீடு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்ற நிலையில் இன்னும் ஆட்டத்தை மாற்ற வைல்ட் கார்ட் போட்டியாளர்களை களமிறக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இரண்டு வீடுகள் என்பதால் ஒரு போட்டியாளரை அனுப்பாமல் ஐந்து போட்டியாளர்களை அனுப்பவுள்ளதாக ப்ரோமோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த 5 போட்டியாளர்கள் தான் நுழையபோவதாக சிலரின் பெயர் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில், விஜே.அர்ச்சனா, சுப்பர் சிங்கர் மானசி, சாம் சமுவேல்ஸ், Kpy பாலா,ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |