ஒரு வாரத்திற்கே இவ்வளவு சம்பளமா? ரொக்கமாக வாங்கிச் சென்ற அன்னபாரதி- எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் அன்னபாரதி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ்
பிரப தொலைக்காட்சியில் தமிழ் மொழியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி 37 ஆவது நாள் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம்.
அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா, யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள்.
மேலும், கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள்.
அன்னபாரதியின் சம்பளம்
இந்த நிலையில் ஸ்மால் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்களுக்கும் தினமும் சண்டை வெடித்து கொண்டிருக்கின்றது.
பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தது தவறு என விசித்திரா மற்றும் அர்ச்சனா இருவரும் பயங்கரமாக பேசி வருகிறார்கள்.
கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியே சென்றுள்ளார்கள். அதில் பிரதீப் - 6,80,000 வும் அன்னபாரதி - 1,40,000 வும் சம்பளமாக பெற்றுள்ளார்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று எதுவும் செய்யாவிட்டாலும் இவ்வளவு சம்பாரிக்க முடியும் என்பதற்கு அன்னபாரதி தான் உதாரணம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |