அரங்கத்தில் எதிரொலிக்கும் ஜோவிகாவின் குரல்.. சுரண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் விசித்ரா!
பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஜோவிகா - விசித்திரா சண்டை வெடித்து கொண்டிருக்கின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தினமும் ஒரு டாஸ்க் பல சண்டைகள் இப்படி பிக்பாஸ் வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
வெடிக்கும் கலவரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விசித்திரா - ஜோவிகா ஆகியோருக்கு இடையில் சண்டைகள் வெடித்து கொண்டிருக்கின்றது.
அதில், ஜோவிகாவை பார்த்து, “ நீ தமிழ் எழுது டீ பார்க்கலாம்..” என விசித்திரா அசிங்கப்படுத்தியுள்ளார். அதற்கு சரியான பதிலடி கொடுத்த ஜோவிகா, “ நா தமிழ் படிக்கல..” என ஓபனாக பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜோவிகாவை தூண்டி விடும் விசித்திரா அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கி வருகிறார்.
இதனால் அழுத்தம் தாங்க முடியாமல் ஜோவிகா சபை நடுவில் கத்திக் கொண்டிருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |