வனிதா பொண்ணுன்னா சும்மாவா.. ஒரே வார்த்தையில் விசித்திரா வாயை மூடிய ஜோவிகா!
அடுத்த வனிதாவாக உருவெடுத்த ஜோவிகாவின் பேச்சு போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தினமும் ஒரு டாஸ்க் பல சண்டைகள் இப்படி பிக்பாஸ் வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
விசித்திராவை கிழித்து தொங்க விட்ட ஜோவிகா
பிக்பாஸ் வீட்டின் முக்கிய பிரபலமான ஜோவிகா விஜயகுமாரை குறி வைக்கும் வகையில் அவரின் படிப்பை காரணம் காட்டி போட்டியாளர்கள் வாதித்து வருகின்றார்கள்.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா மூடியுள்ளார்.
இது ஜோவிகா இது?” என போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
“ ஒரு நிமிடம் வனிதாவை பார்த்தது போல் இருந்தது..” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.