பெண் போட்டியாளர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரதீப்.. கொந்தளிக்கும் பூர்ணிமா!
பெண் போட்டியாளர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரதீப்பை பூர்ணிமா கழுவி ஊற்றுகிறார்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
பிரதீப்பை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்
இந்த நிலையில் தினமும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் பிக்பாஸ் கொடுக்கும் எடைக்கு நிகரான எடையை போட்டியாளர்கள் கொடுக்க வேண்டும்.
இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோற்றால் பெண்கள் அனைவரும் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தணையின் படி பெண் போட்டியாளர்களின் மேக்கப்பை இல்லாமலாக்க வேண்டும் என போட்டியாளர் பிரதீப் கூறுகிறார்.
இந்த விடயத்தை கேட்ட பெண் போட்டியாளர்கள் கொந்தளித்ததுடன் பிரதீப்பிற்கு எதிராக அனைவரும் மாறியுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |