வம்படியாக கலவரத்தை இழுத்து விட்ட பிக்பாஸ்.. டாஸ்க்குக்காக அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் இன்றைய தினம் கொடுத்த டாஸ்க்கால் மிகப்பெரிய கலவரம் போட்டியாளருக்குள் வெடிக்கும் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தினமும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.
கோர்த்து விடும் பிக்பாஸ்
அந்த வகையில் இன்றைய தினம் 340 கிலோ கிராமிற்கு நிகரான எடையை போட்டியாளர்களை ஒழுங்குப்படுத்தும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டாஸ்க்கிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்கள் அனைத்தும் திருப்பி எடுக்கப்படும் எனவும் இதற்காக வீட்டிலுள்ள எந்த பொருளையும் எடுத்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நிற்கிறார்கள். போட்டியாளர்கள் பொருட்களின் எடையுடன் சேர்த்து 570 கிலோவுக்கு மேல் செல்கிறது.
அதன்படி, கூல் சுரேஷ், விஜய்,பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா ரவி உள்ளிட்ட சிலர் அதில் ஏறி நிற்கிறார்கள். அப்போது எடை சரியாக வர வேண்டும் என்றால் “ யாராவது சட்டையை கழட்டுங்க ” என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |